Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு; இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி

6 months ago
in செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

இதுதொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்

குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது,

கடந்த 25.2.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம் விமர்சிக்கப்பட்டுள்ளது.

எமது பக்க நியாயங்களையும், உண்மைகளையும் தங்களின் மேலான கவனத்திற்கு தருகிறோம். ஆராய்ந்து ஏற்ற ஆவண செய்வீர்கள் என நம்புகிறோம். இதன்போது, “இரணைமடுக்குள கமக்காரர் அமைப்புகளின் சம்மேளனம்”பதிவு அற்றதாக தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு எமது சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு உபசட்டவிதிகள் அங்கிகரிக்கப்பட்டு, வங்கி நடைமுறைகள், ஒப்பந்த வேலைகள் செய்யப்பட்டு முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இன்றுவரை இயங்கி வருகின்றது.

கடந்த 2022ஆம் ஆண்டு தற்போதைய பிரதி கமநல அபிவிருத்தி ஆணையாளர் “சமமேளனம்” என பெயரிட்டு இருப்பது சட்ட ஏற்பாட்டுக்கு ஏற்புடையதாக இல்லாது இருப்பதால் பொதுக்கூட்டம் கூடி பெயர்மாற்றம் செய்து தருமாறு கோரி இருந்தார். இதன் பிரகாரம் பெயர் மாற்றம் மேற்கொண்டுள்ளோம்.

அதே சமயம், எமது கணக்குகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு பிரதிகள், மாவட்ட பிரதி ஆணையாளர் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுக்கும் வழங்கி பொதுமக்கள் பார்வைக்கும் எமது காரியாலயத்தில் ஒட்டி பொதுச்சபை கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கிகரிக்கப்பட்ட அறிக்கை.

அதில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் சபையில் கூறிய 2019ஆம் ஆண்டில் இரணைமடு சம்மேளனத்தால் சேகரிக்கப்பட்ட 25, 451,949 ரூபா நிதி விபரம் கோப்பாய் குழுவில் இருந்து பெற்றதாக தெரிவித்திருந்தார். இது எமது கணக்கறிக்கையில் 01.01.2019 ஆம் திகதியில் மொத்தப் பொறுப்பு ஆகும்.

இதில் நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதி (கட்டடங்கள்) 25, 300,002ரூபாய் என்பதை அர்ச்சுனாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே ஒவ்வொரு ஆண்டின் மொத்த பொறுப்பிலும் இந்த நடைமுறை அல்லாத அசையாத சொத்துக்களின் பெறுமதி வரும்.

இந்நிலையில், இராணுவ கட்டுப்பாட்டு பிரதேச வயல் நிலங்களிற்கு உரமானியம் வழங்கியது என தெரிவித்துள்ளார்.

இதற்கும் எமது சம்மேளனத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. ஆயினும் 2021.3.25 இரணைமடு பயிர்செய்கை குழு கூட்ட தீர்மானப்படி இராணுவத்தினர் வைத்துள்ள அரச பண்ணை காணி 65 ஏக்கருக்கு நீர் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி உரம் வழங்கப்பட்டிருக்கலாம். எனவே மேற்படி அவரின் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதுடன் அனைத்திற்கும் ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பித்து எமது தரப்பு உண்மையை உறுதிப்படுத்த தயாராக உள்ளோம். இதனால் எமக்கான வாய்ப்பை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.

தலைவர் தங்களின் மேலான கவனத்திற்கு. கோப்பா குழு இலங்கை நாடாளுமன்றம், சி.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யெ.றஜீவன், இ.அர்ச்சுனா, அரச அதிபர் அவர்கள் மாவட்ட செயலகம் கிளிநொச்சி, பிரதி ஆணையாளர், கமநல அபிவிருத்தி திணைக்களம், கிளிநொச்சி, பிரதிப்பணிப்பாளர், நீர்ப்பாசன திணைக்களம் கிளிநொச்சி, பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், விரிவாக்கம் கிளிநொச்சி, பணிப்பாளர், தேசிய கணக்காய்வு திணைக்களம், மாவட்ட செயலகம் உள்ளிட்டவர்களுக்கு இந்த மனுவின் பிரதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
அமெரிக்கா அனுமதி; ரஷ்யாவிலிருந்து 30 நாள்களுக்கு இந்தியா மசகு எண்ணெய் வாங்கலாம்

அமெரிக்கா அனுமதி; ரஷ்யாவிலிருந்து 30 நாள்களுக்கு இந்தியா மசகு எண்ணெய் வாங்கலாம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.