Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானிடம் ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி?; சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

பிள்ளையானிடம் ஆலோசனை பெற சட்டத்தரணிகளுக்கு அனுமதி?; சட்டமா அதிபரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் நேற்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக பிள்ளையானினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதியரசர்களான ஜனக் டி சில்வா, மேனகா விஜேசுந்தர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, மனுதாரரான பிள்ளையான் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்தச் குற்றச்சாட்டு தொடர்பில் தனது கட்சிக்காரருக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தற்போது அவர் அந்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், தனது கட்சிக்காரர் தற்போது வேறொரு சம்பவம் தொடர்பில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மனுவைத் தொடர்வது தொடர்பில் அவரிடமிருந்து ஆலோசனைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியாளர் நாயகம் சுதர்சன டி சில்வாவிடம், தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை ஆலோசனைகளைப் பெறுவதற்காக சந்திப்பதற்கான வாய்ப்பினை வழங்க முடியுமா? என நீதியரசர்கள் குழாம் வினவியது.

அதற்குப் பதிலளித்த மேலதிக மன்றாடியார் நாயகம்;, மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் அதற்கான கோரிக்கையை முன்வைக்கும் பட்சத்தில் அத்தகைய வாய்ப்பினை வழங்க முடியும் என தெரிவித்தார்.

அதற்கமைய, தடுத்து வைக்கப்பட்டுள்ள மனுதாரரிடமிருந்து தேவையான ஆலோசனைகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதியரசர்கள் குழாம் அறிவித்தது.

இதனையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிடப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.