Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் விளையாட்டுத்துறை மேம்பாடு குறித்து மாநகர சபையில் முக்கிய கலந்துரையாடல்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் விளையாட்டுக் குழுவைச் சார்ந்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (06) மட்டக்களப்பு மாநகர சபை கேட்போர் கூடத்தில் மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நகர எல்லைக்குள் உள்ள விளையாட்டு மைதானங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் விளையாட்டுத்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மைதானங்கள் பல பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் முக்கியமான விளையாட்டு வளங்களாக இருப்பதால் அவற்றை சரியான முறையில் பராமரித்து பாதுகாப்பது அவசியம் என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக மைதானங்களின் சுத்தம், பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் மேம்படுத்தல் மற்றும் எதிர்காலத்தில் விளையாட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் வகையில் புதிய திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், பாடசாலை மாணவர்களின் விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் மாநகர சபை மற்றும் பாடசாலைகள் இணைந்து செயல்படுவதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் மாணவர்கள் அதிகமாக ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்குவது, விளையாட்டு போட்டிகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது போன்ற விடயங்களும் இக்கலந்துரையாடலில் எடுத்துரைக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மாநகர பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர சபையின் விளையாட்டுக் குழுத் தலைவர் கருணாநிதி ஜனகன், மாநகர சபையின் விளையாட்டுக் குழு உறுப்பினர்கள், நகர எல்லைக்குள் உள்ள பல பாடசாலைகளின் உடற்கல்வி ஆசிரியர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டு தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு நடைபெற்ற கலந்துரையாடல் மூலம் மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கான பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இத்துறையை வளர்ச்சியடையச் செய்ய மாநகர சபை தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

நைஜீரியாவில் ஒரே நாளில் 300 பேர் கடத்தல்; பெண்கள், குழந்தைகள் உட்பட அதிர்ச்சி சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.