மாத்தறை – ஹக்மன வீதியின் துடாவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13) காலை பதிவாகியுள்ளது.
மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த பெண் பாதசாரி மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த அந்த பெண் உடனடியாக மாத்தறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட போதும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் அடையாள விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








