Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் தமது வீடுகளை டெங்கு நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்த 09பேருக்கு எதிராக கடந்த மூன்று மாதங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சில பகுதிகளில் தொடர்ந்து டெங்கு அபாயம் நிலவுவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரில் நேற்று (13) மாபெரும் டெங்கு ஒழிப்பு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களும் தூய்மைப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு மாநகரசபை, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதி டெங்கு தாக்கம் அதிகளவில் இனங்காணப்படும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் விசேட நிகழ்வாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்தவர்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பினை ஏற்படுத்தும் குடம்பிகள் இனங்காணப்பட்ட வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பார் வீதியில் வெள்ள நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நீரை வழிந்தோடச்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நீர்நிலைகளில் காணப்பட்ட கழிவுகளும் அகற்றப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் சுதர்ஸன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொலிஸ் தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார்,
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் தினமும் டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுவருகின்றனர். கொக்குவில்,உப்போடை,கல்லடி,நாவற்குடா போன்ற பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரையும் இணைத்து முன்னெடுப்பதன் காரணமாக தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
டெங்கு சோதனைகளை பொலிஸாரையும் இணைத்து முன்னெடுத்துவருகின்றோம்.இதன்போது நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக தமது சூழலை வைத்திருப்போருக்கு எதிராக உடனடியாக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகி;னறது.

அதேபோன்று வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அலுவலகம் மூலம் அறிவித்தல்கள் வழங்கப்பட்டு காணிகளை துப்புரவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,அவ்வாறு துப்புரவு செய்யாதவர்களுக்கு மாநகரசபையின் மூலம் குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.வெற்றுக்காணிகளுக்குள் சுவீகரிப்பு தொடர்பான அறிவித்தல் பலகைகள் இடப்படுகின்றன.14நாட்களுக்குள் குறித்த காணிகளை தூய்மைப்படுத்தாவிட்டால் அவற்றினை சுவீகரிப்பதற்கான சட்ட நடவடிக்கைகளை மாநகரசபை முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு
செய்திகள்

கனடா வேலைவாய்ப்புக்காக எத்தியோப்பியா ஊடாக பயணித்த இலங்கையர்கள் மீட்பு

June 9, 2026
நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!
செய்திகள்

நேர்முகத் தேர்வில் முன்னுரிமை கோரி யாழ் சுகாதார தொண்டர்களின் போராட்டம் தீவிரம்!

June 9, 2026
நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!
செய்திகள்

நானுஓயாவில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மண் மேட்டில் மோதி விபத்து!

June 9, 2026
தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!
செய்திகள்

தலவத்துகொட உணவக தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மூவரும் உயிரிழப்பு!

June 9, 2026
காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை
செய்திகள்

காற்றின் வேகம் அதிகரிக்கும்; கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

June 9, 2026
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு ஊழல் விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

June 9, 2026
Next Post
இலங்கை – ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

இலங்கை - ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.