Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

இலங்கை திவாலாக முக்கிய காரணமாக அமைந்த இராஜபக்ச குடும்பத்தின் பாரிய மோசடி

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்சாவின் எயர்பஸ் மோசடியில் தொடர்புடைய இன்னொரு முக்கிய நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் தற்காலிகமாக அடைக்கப்பட்டு இருக்கிறார்.

2013 ஆம் ஆண்டில் எந்த அமைச்சரவைத் தீர்மானமும் இல்லாமல், சமல் ராஜபக்சவின் வீட்டில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அதன் தலைவராக இருந்த சிரிலியாவின் சகோதரர் உட்பட சிலர் சந்தித்து நான்கு விமானங்களை வாங்குவது குறித்து கலந்துரையாடினர்.

ரோல்ஸ் ராய்ஸ் இயந்திரங்களுடன் கூடிய இந்த விமானங்களின் மொத்த மதிப்பு 89.4 பில்லியன் ரூபாய் ஆக இருந்தது.

ஆனால் அந்நிறுவனத்துடன் இரகசியமாக பேச்சுவார்த்தை நடத்திய அப்போது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன முதற்கட்ட விலையை விட இரட்டிப்பு அளவான 146.1 பில்லியன் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டார்.

இந்த கொடுக்கல் வாங்கல் பற்றி அப்போது சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி இதுவாகும்;

”இலங்கை மக்களின் வரிப்பணத்தில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை பிரான்சின் ஏர் பஸ் நிறுவனத்துக்கு செலுத்தி பெரும் கமிஷன் தொகையை பெறுவது கபில சந்திரசேன ஒருவரால் மட்டும் செய்ய முடியாதது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

இந்த ஒப்பந்தத்தின் பின்னால் நாமல் ராஜபக்சாவும், ராஜபக்ச குடும்பமும் இருந்தது.

கபில சந்திரசேனவை முன்வைத்து இந்த பெரும் மோசடி திட்டமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 16 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதில் 2 மில்லியன் டாலர் முன்பணம், கபில சந்திரசேனாவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்க அவர்களின் சிங்கப்பூரில் உள்ள Standard Chartered Bank கணக்கில் செலுத்தப்பட்டது.

பின்னர் அந்த தொகை ”British Virgin Islands” கணக்கிற்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து 400,000 டாலர் வீதம் பல முறை நிமல் ஹேமசிறி பெரேராவின் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பண பரிமாற்றங்கள் கபில சந்திரசேனாவின் மனைவி பிரியங்கா விஜேநாயக்க செய்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த விவரங்கள் அனைத்தும் பிரிட்டனின் Crown Court நீதிமன்றத்தில் வெளிச்சத்துக்கு வந்தன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்னும் இலங்கையின் நீதிமன்றத்தில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.
இங்கு நிமல் ஹேமசிறி பெரேரா குறித்து சில விஷயங்களை குறிப்பிட வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தின் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் இடைநிலை நபராக செயல்பட்டவர் அவர்.
நாமல் ராஜபக்சாவுக்கு பெரும் கமிஷன் கிடைத்ததாக கூறப்படும் க்ரிஷ் திட்ட மோசடி தொடர்பாக இந்தியாவில் பணதூய்தாக்கல் குற்றச்சாட்டில் பெயர் பெற்ற அமித் கட்டியால் (Krrish நிறுவன உரிமையாளர்) என்பவரை நாமலுக்கு அறிமுகப்படுத்தியது நிமல் பெரேராவே.

இலங்கையில் மிக உயரமான கட்டடம் அமைக்கும் திட்டத்திற்காக Krrish நிறுவனத்திற்கு இடம் வழங்கியதும், அப்போது நகர அபிவிருத்தி ஆணையத்தின் தலைவர் ஆக இருந்த நிமல் பெரேராவே.

Krrish நிறுவனம் வழங்கிய மில்லியன் கணக்கான டாலர் கமிஷன் தொகை, சிங்கப்பூரில் உள்ள நிமல் பெரேராவுடன் தொடர்புடைய கணக்கிற்கு செலுத்தப்பட்டதாகவும், அந்த கணக்கிலிருந்து நாமல் ராஜபக்சவின் கணக்கிற்கு பணம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விரைவில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

ஏர்பஸ் ஒப்பந்தத்தால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது.

நாமல் உள்ளிட்ட குடும்பத்தினர் இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தாலும், பின்னர் பிரான்ஸ் நிறுவனம் வழங்கிய நட்டயீட்டுடன் சேர்த்து சில இழப்பீடுகள் மீட்கப்பட்டன.

இருந்தாலும் இலங்கைக்கு ஏற்பட்ட மொத்த இழப்பு 16,924 மில்லியன் ரூபாய் ஆகும்.
இந்த மோசடியால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய, ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மக்களின் வரிப்பணத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பை அரசு செலுத்தி வருகிறது.”

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
Next Post
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.