Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு இன்று (16) காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார்.

இந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வந்தது என்பதை நிர்வாக பணிப்பாளர் உறுதிப்படுத்தினார்.

தற்போது கொள்முதல் கட்டளை (ஒர்டர்) செய்யப்பட்ட அனைத்து கப்பல்களும் திட்டமிட்டபடி வந்து சேர்வதாகவும், நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஒர்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை புதிய கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ், அனைத்து நோயாளர் காவு வண்டிகளுக்கும் விசேட முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதன் மூலம், அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நோயாளர் காவு வண்டிகள் இலங்கை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், களஞ்சியசாலைகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையின் கீழ் செயல்படுத்தப்படும் நடவடிக்கைகளை எடுத்துரைத்த அவர், சில தரப்பினர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க மோசடி கணக்குகளைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது என்று எச்சரித்தார்.

அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான fuelpass.gov.lk ஐ மட்டுமே பயன்படுத்துமாறும், வேறு எந்த வலைத்தளம் அல்லது மூன்றாம் தரப்பினருக்கும் தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

QR அமைப்பின் கீழ் பதிவு செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்த அவர், வாகனங்கள் அல்லது மொபைல் எண்களில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பதிவு செய்ய முடியாத நபர்களுக்கான சிக்கல்களைத் தீர்க்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!
செய்திகள்

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

October 26, 2026
ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!
செய்திகள்

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

October 26, 2026
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
செய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 26, 2026
Next Post
போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

போலியான தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர தளம் – தனிப்பட்ட தகவல் கொடுக்க வேண்டாம்; சைபர் பாதுகாப்பு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு