Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம்!

இலங்கையில் வருடாந்தம் 9,500 வரை காசநோயாளிகள் அடையாளம்!

6 months ago
in செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 8,500 முதல் 9,500 வரையான காசநோயாளிகள் பதிவாவதாக காசநோய் மற்றும் மார்பு நோய் தடுப்பிற்கான தேசிய திட்டம் தெரிவித்துள்ளது.

இவர்களில் சுமார் 45 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என சமூக சுகாதார விசேட நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 24 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள உலக காசநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“உலக சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் காசநோய்த்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளாக வருடாந்தம் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. கடந்த ஆண்டில் 8,726 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் 93% பேர் முதன்முறையாக நோய் பாதிப்புக்குள்ளானவர்கள். இவர்களில் 75% பேருக்கு நுரையீரலில் காசநோய் ஏற்பட்டுள்ளதுடன், சுமார் 5,500 பேர் மற்றவர்களுக்கு நோயைப் பரப்பக்கூடிய நிலையில் உள்ளனர். புவியியல் ரீதியாக மோதரை, மட்டக்குளி, பொரள்ளை, வனாத்தமுல்ல மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகள் அதிக அவதானம் மிக்க இடங்களாகக் காணப்படுகின்றன.”

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட காசநோய் தடுப்பு மற்றும் மார்பு நோய் தேசிய திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் பிரமிதா சாந்திலதா கருத்து தெரிவிக்கையில்:

“காசநோய் முக்கியமாக சுவாசப் பாதை வழியாகவே பரவுகிறது. நோயாளி ஒருவர் இருமும்போது, தும்மும்போது அல்லது பலமாக சிரிக்கும்போது வெளியேறும் பக்டீரியாக்கள் மூலம் மற்றவர்களுக்கு இந்நோய் பரவுகிறது. இது நுரையீரலைப் பாதித்து, பின்னர் உடலின் ஏனைய பாகங்களுக்கும் பரவக்கூடும். நோய் தீவிரமடைவதற்கு முன்னரே நோயாளிகளைக் கண்டறிவதன் மூலம் இதனைக் கட்டுப்படுத்த முடியும்.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

கத்தார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்; பாதுகாப்பு எச்சரிக்கை தீவிரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு