அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த மாதம் 28ஆம் திகதி தாக்குதல்களை ஆரம்பித்தது.
நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஈரானின் கேஸ் வயலைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு பதிலடியாக கட்டாரின் கேஸ் வயலை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றுவது தொடர்பில் ஈரான் மீது தரை வழி தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படை வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள ட்ரம்ப், அந்நாட்டில் எஞ்சியுள்ள இலக்குகளை விரைவில் முடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர் கப்பல்களை அனுப்பாத நட்பு நாடுகளுக்கும் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.








