தம்பி சாணக்கியனுக்கு ஈழத்தமிழ் ஆனந்தன் கனடாவில் இருந்து எழுதும் காகிதம்.
தம்பி உமது பேச்சுக்கும், செயலுக்கும், நடிப்புக்கும் பல முரண்களை அவதானித்தேன் அதனால் எனது மனதில் தோன்றியதை சொல்கிறேன். சிலவேளை இதனையும் அவதூறாக நினைத்து அந்த ஐம்பதில் ஐம்பத்தி ஒன்றாக எனக்கும் வழக்குப்போட்டாலும் பறவாய் இல்லை இதனை சொல்லியே ஆகவேண்டும்.
2023, ல் நீர், சுமந்திரன் உட்பட 16, Member of Parliamentarians TNAயில் இருந்தபோது Online Safety Act Bill Parliament, விவாதத்தில் மிகவும் உணர்வாக எதிர்த்து Speck செய்து எதிர்த்த வயது குறைந்த ஒரு இளம் எம் பி நீர்தான் அதை கேட்டு சந்தோஷப்பட்டேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பிறந்த குழந்தைதான் நிழல்நிலை காப்புச்சட்டம் இவை இரண்டு சட்டங்களும் நீக்கவேண்டும் என UN தொடக்கம் Domestic Organizations வரை எதிர்ததை நீர் அறிந்திருப்பீர்.
இப்போது உமக்கு 37, வயது என நினைக்கிறேன். நீர் அரசியலில் 2015, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளராக இருக்கும் போது உமக்கு வயது 25, பேந்து தமிழரசுக்கட்சியில் 2020, ல் சேரும்போது 30, வயது அப்படித்தானே தம்பி ?

நான் இவைகளை சொல்லுவது அரசியல் அனுபவம் பெறுவதற்கு இன்னும் பல படிகளை நீர் தாண்டவேண்டும் தம்பி.
நீர் 50, பேருக்கு ஊடகம் சார்ந்தோர், அரசியல் சார்ந்தோர், ஆதரவாளர்கள் சார்ந்தோர் என பட்டியல் இட்டு உம்மை அவதூறு செய்தவயள் என வழக்குபோட்டுளீர் ஶ்ரீலங்கா நீதித்துறை நல்ல தீர்ப்பு அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நீரே எதிர்த்த Online Safety Act சட்டத்தை பயன்படுத்தியுள்ளீர் அது உமது வயது அனுபவத்துக்கு சரியாக பட்டாலும் இது ஒரு ஏற்கமுடியாத முட்டாள்தனமான செயல் என்பதே எனது முதலாவது கருத்து.
உமக்கு அரசியல் அத்திவாரம் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பதையே இந்த வழக்கு மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்திவாரம் பிழைத்தால் எல்லாமே தலைகீழ்தான் என்பதை உணர்தியுள்ளீர் இந்த வழக்கு மூலமாக தம்பி.
அடுத்து இரண்டாவது கருத்து தம்பி சாணக்கியன்!
உம்மை 50, பேர் அவதூறு செய்திருக்கினம் என்ரால் சிக்கல் அவர்களிலா உம்மிலா என்ரொரு சந்தேகம் எனக்கு உண்டு.
ஏனெனில் ஒருவருக்கு 50, பேர் அவதூறு செய்யும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு என்ன காரணம்.?
ஒருவர் இருவர் என்ரால் அது நியாயமாக இருக்கலாம் 50, பேர் உம்மை தாக்கினம் என்ரால் நீங்கள் எங்கேயோ தவறிழைக்கினம் என்று அல்லவா சாதாரணமானவர்களும் நினைப்பினம்.
ஒரு நபரை குறிவைத்து 50, பேர் அவதூறு செய்வதென்றால் அந்த நபர் மீதும் ஏதோ ஒரு பிழை, தப்பு, தவறு உள்ளது என்றுதானே அர்த்தம் அதாவது அவர்களில் உமக்கு false consciousness உண்டு என்பதே உண்மை.
அரசியல் சாக்கடை என்றும் கூறப்படுகிறது.
50,அம்புகள் உம்மை தாக்குகிறது என்ரால் அந்த அம்புகள் ஏன் தாக்குகினம் என்பதை ஒருதடவை கண்ணை மூடிக்கொண்டு தனிமையில் ஐந்து நிமிடம் இருந்து சிந்தித்து அவர்கள் கூறும் கருத்தில் நியாயம் உள்ளதா?
அல்லது நீர் அவர்கள் மீது கூறும் குற்றத்தில் நியாயம் உள்ளதா என்பதை பல முறை யோசியுங்கள்.
அவர்கள் மீதுதான் குற்றம் எனில் நீங்கள் அதனை அணுக பல வழிமுறைகள் உண்டு ஏனெனில் நீர் மக்கள் பிரதிநிதி, வளர்ந்துவரும் அரசியல்வாதி இளம் வயது இன்னும் மக்கள் செல்வாக்கை பெற வேண்டியவன் அந்த நபர்களை அணுகி பேசி இணக்கப்பாடு காண்பதே அரசியல் வாதிக்கான நாகரீகமும் நல்ல பண்பும்..
பணத்தால் மட்டும் கோடிகொடுத்து தொடர்ந்தும் மக்கள் பிரதிநியாக இருக்கலாம் என்று மட்டும் எண்ணாதே வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாகும் தம்பி.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நல்ல உதாரணம் கோடிப்பணத்தை அள்ளி இறைத்த சஜீத், ரணில், நாமலால், சாதாரண அநுராவை தோல்வியடைய வைக்க முடியவில்லை.
மட்டக்களப்பில் உமக்கு 65000, Votes கிடைத்தது என்ரால் நீர் யாரிடமோ பெற்ற கறுப்பு கோடி பணத்தால் பெற்ற Votes. அது எதிர்வரும் 2029, ல் சாத்தியப்படாது, பணத்தால் மட்டும் அரசியலில் முன்னுக்குவரமுடியாது, பண்பு, எதிரியையும் நண்பனாக மாற்றும் குணம், அரவணைக்கும் செயல், ஆணவம் இல்லாத்தன்மை வேண்டும் இது அரசியல்வாதிகளுக்கு கட்டாயம் தேவை.
அறிஞர் பாப் ஹோப் கூறியது “எந்த ஒரு கட்சியாலும் எல்லா மக்களையும் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது”
இந்த உண்மையை நீரும், சுமந்திரனும் புரிந்து கொள்வது நல்து தம்பி.
எடுத்த எடுப்பில் சட்டத்தை நாடி தண்டனை வாங்கி கொடுப்பது உமக்கு திருப்தியாக இருக்கலாம் அதனால் உமது எதிர்கால அரசியலுக்கு 50, அம்புகள் 5000, அம்புகளாக மாறி இன்னும் பல அவதூறுகள் உம்மீது பாயும். இப்படி வழக்குப்போட்டதும் ஒருவகை துரோகத்தனம் என்பதை உமக்கு Advice கூறும் சுமந்திரன் லோயர் சொல்லவில்லையா. ? அல்லது அவரும் உமது அரசியல் வளர்சியை பிடிக்காமல் தடுக்கும் முதல் கட்ட சதியாக உம்மை பயன்படுத்தினாரா .? என்ற சந்தேகம் எனக்கு வந்தது. ஆழ்ந்து சிந்தியுங்கள் தம்பி
அரசியலில் இப்படி நண்பனாய் இருந்து குழியில் தள்ளியவர்களுடைய வரலாறுகள் பல உண்டு.
இறுதியாக ஒன்றை கூறி முடிக்கிறன்.
நீர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின்மீது வடமாகாணத்து மக்களும் திருப்தியில்லை, கிழக்குமாகாணத்து மக்களும் திருப்தியில்லை அதற்கு காரணங்கள் பல உண்டு தனிநபர் ஆதிக்கம்,கட்சிவழக்கு, தலைவர், பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழு தலைவர் அனைத்தும் தற்காலிகம் நிரந்தமாக இல்லை இரண்டு அணியாக உமது கட்சி சிதறி உள்ளது உந்த லெட்சணத்தில் மாகாணசபை தேர்தல் நடந்தால் கட்சி எதிர்ப்பு ஒருபக்கம், யாழ்ப்பாணம்த்தில் சுமந்திரனின் எதிர்ப்பு, மட்டக்களப்பில் சாணக்கியனின் எதிர்ப்பு என்பன தமிழரசுக்கட்சியில் விஷ்வரூபம் எடுத்து மிகவும் பாரிய பின்னடைவுகளையும், எதிர்பாராத வீழ்ச்சியையும் தமிழரசுக்கட்சி சந்திக்கும்.
உமது ஆணவப்போக்கு உமக்கு மட்டுமல்ல அது கட்சிக்கே சாவுமணி அடிக்கும் என்பதை உணர்ந்து அனைவரையும் கட்டி அணைத்து அரசியல் செய்ய பழகும்.
சுமந்திரனின் சட்டப்பயங்கரவாதத்தை நீரும் கையாண்டால் உமது அரசிலும் இந்த எம்.பி பதவியுடன் முற்றுப்பெறும்.
இது எனது Advice மட்டுமே திருந்துவதும் வருந்துவதும் உம்மை பொறுத்தது.
“ஒருவனும் பிறனுக்கு விரோதமாய் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள் இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்”








