Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கி சென்ற பேருந்து-பேருந்துக்கு 3 நாள் தடை;நடத்துனருக்கு 5 நாள் தடை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார்
பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின்
நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள்
போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக்
கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து
வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை
அவதானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து
அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால்
தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை
முன்னெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை
பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில்
இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு
இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய
பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து
நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான
உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப்
பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது.

எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது
முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது
காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார
சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
எரிபொருள் QR சிக்கலா? இதோ உடனடித் தீர்வு! புதிய உதவிச் சேவை!

எரிபொருள் QR சிக்கலா? இதோ உடனடித் தீர்வு! புதிய உதவிச் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.