ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், ஆனால் அங்கு பேச்சுவார்த்தை
நடத்துவதற்கு “யாரும் மிஞ்சவில்லை” என்றும் அதிபர் ட்ரம்ப் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்ட பிறகு
அந்நாட்டின் ஆட்சி அதிகாரம் மற்றும் ராணுவக் கட்டமைப்பு சிதைந்துவிட்டதாக ட்ரம்ப் கூறினார்.ஈரானின்
கடற்படை, விமானப்படை மற்றும் ரேடார் அமைப்புகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன என்றும், இப்போது
அங்கே தலைவராகப் பொறுப்பேற்கவே யாரும் முன்வருவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதே தங்களின் ஒரே நோக்கம் என்று கூறிய டிரம்ப்
அதற்கு பேச்சுவார்த்தை ஒரு வழியாக இருந்தாலும் தற்போது ஈரானில் அதற்குரிய நிலையான தலைமை
இல்லை என்றார்.








