Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அடித்துக் கொலை;பொலிஸார் அம்பலப்படுத்திய திடுக்கிடும் உண்மைகள்!

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அடித்துக் கொலை;பொலிஸார் அம்பலப்படுத்திய திடுக்கிடும் உண்மைகள்!

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கணவன் மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் குறித்த விரிவுரையாளரான தனது தாயையும் தனது தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைகள் செய்வதற்காக யாழ்ப்பாண பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்கு சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரமும் காணப்பட்டது.

இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிரிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றையதினம் திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய மனைவி மற்றும் 21 வயதுடைய கணவன் என் இருவரையும் கைதுசெய்தனர்.

இந்நிலையில் அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் விரிவுரையாளரான குறித்த பெண், மருமகனின் தாக்குதலின்போது உயிரிழந்த விடயம் தெரிய வந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரது சடலத்தை எடுத்து சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வகையில் குறித்த சடலம் எங்கே வீசப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அந்த சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
தென் கொரியாவில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

தென் கொரியாவில் தீ விபத்து; 10 பேர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.