கட்டாரில் இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளனதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் மாயமாகியுள்ளார்.
இராணுவத்துக்கு சொந்தமான இந்த ஹெலிக்கொப்டர், ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வளைகுடா கடல் எல்லைக்குள் நொறுங்கி விழுந்தது. விபத்து ஏற்பட்டபோது அதில் 7 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்த விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் எனக்கூறியுள்ள கட்டார் அரசு, 6 பேர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளது. மற்றவரை தேடும் பணி நடந்து வருகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு மத்தியில் இந்த ஹெலிக்கொப்டர் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








