Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு!

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு!

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வாழைச்சேனை மருதநகர் ஹனியல் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று முன்தினம் (21) மருத நகர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் யாவும் ஆரம்பமானது.

இதன்போது வடக்கு கிழக்கு திருமாவட்ட அவை செயலாளர் அருட் கலாநிதி கே.எஸ்.நிசாந்தன் தலைமை உரையாற்றினார்.

கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி W.A. சிஹான் டிலங்க வாழ்த்துரை நிகழ்த்தினார். இருவரது உரையின் போது இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகும் செயற்பாட்டினை கட்டுப்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்கள்.

நிகழ்வில் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அரங்கை கவர்ந்திருந்தது வாலிபப் பிள்ளைகளுக்கான, பெற்றோர்களுக்கான, பணியாளருக்கான, விருந்தினர்களுக்கான என பல்வேறு விளையாட்டுகள் இடம்பெற்றன.

இதேவேளை நிகழ்வில் முதன் நிகழ்வாக ஆண்களுக்கான மரதன் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி என்பன நடைபெற்றன.

போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்வில் பிரதேச சர்வமத குருமார்கள், பிரதேச கிராம சேவகர் அ.பிரபு, பிரதேச செயலக போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர விளையாட்டு உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
“வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை வெளிப்பட்டது”; மனோகணேசன் சாடல்

“வெளியுறவு கொள்கையில் இலங்கை அரசின் முதிர்ச்சி இன்மை வெளிப்பட்டது”; மனோகணேசன் சாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு