வெளியாகிய உயர்தர பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவி ஜாஸத் ஜெஸா உயிர் முறைமை தொழில்நுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதல் நிலை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் இருமொழி மாணவராக (Bilingual student) ஆக சாதாரண தரத்தில் 9A சித்தி பெற்றவரும் பாதுகாப்பு அமைச்சின் நிருவாக உத்தியோகத்தர் திருமதி . சித்தி ஜாஹிதா மற்றும் ஓய்வு பெற்ற நில அளவை திணைக்கள உத்தியோகத்தர் முகம்மது ஜலால்தீன் தம்பதியினரின் கனிட்ட புதல்வியுமாவார்.








