வலதுசாரி அரசியல் கலாசாரத்தைக் கொண்டதும், எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத ஐக்கிய மக்கள் சக்தி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் ஒருபோதும் கைகோர்க்காது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் மட்டுமே கைகோர்க்கும் என்றும் அவர் கூறினார்.
‘நான் ஒரு பெண்ணுடன் பழகுகிறேன் என்று கற்பனை செய்து பாருங்கள். அவளுடைய தந்தை அதனை எதிர்க்கிறார்.
நாம் தப்பி ஓடி திருமணம் செய்து கொள்கிறோம். தந்தை நோய்வாய்ப்படுகிறார். அவரைப் பார்க்க நாம் மூதாதையர் வீட்டிற்கு வருகிறோம்.
எனவே, நாங்கள் தந்தையின் வீட்டில் தங்கலாம். இல்லையா?’ என்று வினவிய பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், ஐக்கிய தேசியக் கட்சியே தனது பூர்வீக இல்லம் என்றும் வர்ணித்தார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் ‘மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோரே நாட்டை வங்குரோத்துக்கு நிலைக்கு உள்ளாக்கியமைக்கு பொறுப்பானவர்கள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவர்களுடன் நாம் கூட்டணி அமைக்க முடியுமா?’ என்றும் அவர் தெரிவித்தார்.








