எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக பாராளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படிஇ ஓவ்வொரு டீசல் லீற்றருக்கும் 100 ரூபாய் நிவாரணமும் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படவுள்ளன.
இதற்காக மாதம் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாதங்களுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படும் என ஜனாதிபதி அநுர குமார குமார தெரிவித்துள்ளார்.








