Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“ட்ரம்ப்பின் வார்த்தைகள் போர் குற்றத்திற்கான அறிகுறி” – சர்வதேச சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம்!

“ட்ரம்ப்பின் வார்த்தைகள் போர் குற்றத்திற்கான அறிகுறி” – சர்வதேச சட்ட நிபுணர்கள் கடும் கண்டனம்!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

ஈரானின் “முழு நாகரிகத்தையும் அழிப்பேன்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையானது, “ஒழுக்க ரீதியில் கண்டிக்கத்தக்கது மற்றும் சட்ட ரீதியாக நியாயப்படுத்த முடியாதது” என டப்ளின் திரித்துவக் கல்லூரியின் சர்வதேச மனித உரிமைகள் சட்டப் பேராசிரியர் மைக்கேல் பெக்கர் (Michael Becker) தெரிவித்துள்ளார்.

முன்னர் சர்வதேச நீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட பேராசிரியர் பெக்கர், ட்ரம்ப்பின் இந்த வார்த்தைகள் பாரிய அளவிலான யுத்தக் குற்றங்களை முன்னெடுப்பதற்கான எண்ணத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஈரானின் சிவிலியன் மக்கள் தொகைக்கு எதிராக இத்தகைய தாக்குதலை நடத்துவது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக கருதப்படும் எனச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழியும்” என்ற ட்ரம்ப்பின் சமூக ஊடகப் பதிவு, ஒரு இனப்படுகொலை நோக்கத்தைப் பிரதிபலிக்கிறதா என வகைப்படுத்துவது கடினமாக இருக்கலாம். ஏனெனில், அப்படி நடப்பதை தான் விரும்பவில்லை” என்றும் ட்ரம்ப் அதே பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ட்ரம்ப்பின் இந்த அலைபாயும் மொழி இனப்படுகொலை சார்ந்ததா என்பது இங்கே முக்கியமல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் கூற்று தெளிவான சட்டவிரோத ஆக்கிரமிப்பு மிரட்டலாகும். இது ஈரானிய பொதுமக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட குற்றவியல் தாக்குதலையே எதிர்வுகூறுகின்றது.

இத்தகைய அவமானகரமான கருத்துக்களை குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரும் நிபந்தனையின்றி கண்டிக்க வேண்டும்” என பேராசிரியர் மைக்கேல் பெக்கர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

ரஷ்ய இராணுவத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு