Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“அநியாயமான வேலைநிறுத்தம்; GMOA உடனான இன்றைய பேச்சுவார்த்தை இரத்து!” –  நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி

“அநியாயமான வேலைநிறுத்தம்; GMOA உடனான இன்றைய பேச்சுவார்த்தை இரத்து!” – நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இவ்வாறான முறையில் நடந்துகொண்டால் இன்று வழங்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை நான் நடத்தமாட்டேன். இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம்” எனத் குறிப்பிட்டார்.

அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தை தொடர வேண்டாம் எனத் கேட்டுக்கொண்ட அமைச்சர், இன்று முதல் பணியைப் பொறுப்பேற்கவுள்ள புதிய வைத்திய அதிகாரிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்பதால், எவ்வித அச்சமும் இன்றி அவர்கள் கடமைக்கு சமூகமளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் பயிற்சிக்கு பிந்தைய நியமனங்களை வழங்குவதில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருந்தால், அதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடுவதே சிறந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறியதாவது,

“மத்திய கிழக்கில் நெருக்கடி நிலவும் வேளையில், இவ்வாறு ஐந்து நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. பயிற்சிக்கு பிந்தைய மருத்துவ நியமனப் பட்டியலைத் தயாரிப்பதில் GMOA இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்றே அவர்கள் இந்தப் போராட்டத்தைச் செய்கின்றனர். முதல் நியமனத்திற்கு இடமாற்றச் சபை அவசியமில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு குழுவினரை அழைத்து, நியமனங்களைப் பொறுப்பேற்க வேண்டாம் என அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். 453 வைத்தியர்களில் 436 பேர் ஏப்ரல் 4 ஆம் திகதியாகும் போது தமக்கு இந்த நியமனம் வேண்டும் என விண்ணப்பித்துள்ளனர். மீதமுள்ளவர்களில் 16 பேர் பயிற்சிகளைச் சரியாக முடிக்காதவர்கள். உண்மையில் ஒருவர் மாத்திரமே விண்ணப்பிக்கவில்லை. எனவே, இந்த வேலைநிறுத்தத்திற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.”

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு

மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு