நாளை (09) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக புன்னைச்சோலை பகுதிக்கு மின்னிணைப்பு கொண்டு செல்லும் மற்றும் புன்னைச்சோலையினூடாக மின் இணைப்பு கடந்து செல்லும் பகுதிகளுக்கு (சுற்றுவட்டார பகுதிகளில்) நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு இடம்பெறும்.
இந்த மின்வெட்டு தொடர்பான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








