Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

வத்திக்கானை மிரட்டியுள்ள பென்டகன்; போப்பாண்டவரின் வருகையும் இரத்து

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வத்திக்கான் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மோதல், இன்று உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

The Free Press ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,

கடந்த ஜனவரி மாதம், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் கொள்கைப்பிரிவு துணைச் செயலாளர் எல்ப்ரிட்ஜ் கோல்பி (Elbridge Colby), வத்திக்கான் அமெரிக்கத் தூதரான கார்டினல் கிறிஸ்டோபர் பியர் (Cardinal Christophe Pierre) என்பவரைப் பென்டகனுக்கு வரவழைத்து ஒரு இரகசியச் சந்திப்பை நடத்தியுள்ளார்.

“இந்த உலகில் தான் விரும்புவதை எதையும் செய்வதற்கு அமெரிக்காவிற்கு இராணுவ பலம் உள்ளது. எனவே, கத்தோலிக்க திருச்சபை அமெரிக்காவின் பக்கம் நிற்பது அதற்கு நல்லது” என்று கோல்பி நேரடியாக எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 9 அன்று போப் 14-ஆம் லியோ (Pope Leo XIV) ஆற்றிய உரையில், அமெரிக்காவின் ‘டான்ரோ கோட்பாட்டை’ (Donroe Doctrine) மறைமுகமாக விமர்சித்து, “சமாதானத்திற்குப் பதிலாக இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது ஆபத்தானது” என்று கூறியதே இந்தப் கோபத்திற்கு அடிப்படைக் காரணமாகும்.

இந்தச் சந்திப்பின் போது அமெரிக்க அதிகாரிகள் ‘அவிக்னான் பாப்பசி’ (Avignon Papacy) காலத்தை நினைவூட்டியதாகக் கூறப்படுகிறது.

14-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மன்னன் பிலிப், திருச்சபையைத் தனது விருப்பத்திற்கு வளைத்து, போப்பாண்டவரைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு இருண்ட காலமே இதுவாகும்.

“நாங்கள் நினைத்தால் உங்களை எங்களது இராணுவ பலத்தின் மூலம் அடிபணிய வைக்க முடியும்” என்பதையே பென்டகன் இதன் மூலம் குறிப்பாகச் சொல்ல வந்துள்ளதாக வத்திக்கான் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் 250-வது ஆண்டு விழாவைக் கொண்டாட வரவிருந்த போப்பாண்டவரின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance), இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இன்று தெரிவித்துள்ளார். இருப்பினும், பென்டகன் இந்தச் செய்திகளை “திரிக்கப்பட்டவை” என்று மறுத்துள்ளது.

தெய்வீக அதிகாரத்திற்கு எதிரான இந்த இராணுவ மிரட்டலானது தற்போது அமெரிக்கா மற்றும் வாடிகன் இடையிலான உறவு அதன் வரலாற்றிலேயே மிகக் கீழான நிலைக்குச் சென்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆன்மீகத் தலைவரான போப்பாண்டவரை ஒரு இராணுவ வல்லரசு பகிரங்கமாக மிரட்டியிருப்பது, உலக அரசியலில் ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரத்தின் மீதான ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகும். வான்ஸ் கூறுவது போல இது ஒரு தவறான புரிதலா அல்லது நவீன கால ‘அவிக்னான்’ முயற்சி தானா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
வெடுக்குநாறிமலை பௌத்த மதத்துக்குரியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; வர்த்தமானி வெளியிடப்போவதாக அறிவித்தார் பௌத்த சாசன அமைச்சர்

வெடுக்குநாறிமலை பௌத்த மதத்துக்குரியவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ; வர்த்தமானி வெளியிடப்போவதாக அறிவித்தார் பௌத்த சாசன அமைச்சர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு