Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே ஈரான் தலைவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே ஈரான் தலைவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை அதிபர் தலைமையிலான குழுவும், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றினர்.

இந்த முக்கிய சந்திப்பை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது ட்ருத் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “சர்வதேச நீர்வழிகளை பயன்படுத்தி உலக நாடுகளை மிரட்டி பணம் பறிப்பதற்கான வழிகள் மட்டுமே ஈரானுக்கு இருந்தன. தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் உள்ளனர்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், பத்திரிகையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஜே.டி. வான்ஸ் மிகப்பெரிய சாதனையை செய்ய இருக்கிறார்” என பாராட்டியதுடன், ஈரான் இராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும் கூறினார். “ஒப்பந்தம் ஏற்பட்டாலோ இல்லையோ, வளைகுடாவில் உள்ளஹார்முஸ் திறக்கப்படும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், “இந்த நிலைமை விரைவில் தீர்க்கப்படும். தேவையானால் மாற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்த ட்ரம்ப், ஈரானின் கடற்படை, விமானப்படை மற்றும் தலைமை அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா நன்நோக்கத்துடனே கலந்துகொண்டதாக தெரிவித்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள் கைது; ஒருவர் வைத்தியசாலையில்

பாடசாலை நேரத்தில் மதுபானம் அருந்திய மாணவர்கள் கைது; ஒருவர் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு