ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.
இது ஒரு மாத காலத்துக்குள் விரைவாக நான் ஜனாதிபதி என்கின்ற அடிப்படையில் உங்களுக்கு வாக்குறுதி தருகின்றேன். இதை மிக விரைவாக நாங்கள் நடைமுறைப்படுத்தித் தருவோம்’ என்று கூறினார். ஆனால் இன்று வரைக்கும் ஜனாதிபதி அவர்களால் தரப்பட்ட முதலாவது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து நாங்கள் மிகக் கவலையடைகின்றோம் எனவும் இதன்போது தெரிவித்தார்.
நேற்று (12) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர்,








