Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்களை முற்றுகையிடப்போகும் அமெரிக்க சென்ட்காம் படைகள்

ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்களை முற்றுகையிடப்போகும் அமெரிக்க சென்ட்காம் படைகள்

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் United States Central Command (சென்ட்காம்) படைகள், ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஈரானின் துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அமெரிக்க நேரப்படி ஏப்ரல் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் அமல்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கடல் முற்றுகை, ஈரான் நாட்டின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், குறிப்பாக பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் உள்ள துறைமுகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நாட்டைச் சேர்ந்த கப்பல்களாக இருந்தாலும், பாகுபாடின்றி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஹார்முஸ் வழியாக ஈரானைத் தவிர்ந்த பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு சென்று வரும் கப்பல்களின் சுதந்திரமான கடல் பயணத்திற்கு தடையில்லை எனவும் சென்ட்காம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பான மேலதிக அறிவிப்புகள் வணிகக் கப்பல் இயக்குநர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் என்றும், குறிப்பாக ஓமான் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளில் பயணிக்கும் கப்பல்கள் கடற்படை தகவல் ஒலிபரப்புகளை கவனிக்க வேண்டும் என்றும், அவசியமான சந்தர்ப்பங்களில் அமெரிக்க கடற்படையுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
Next Post
அதிர்ஷ்டமாக கிடைத்த பெருந்தொகை பணத்துடன் சென்ற தமிழ் இளைஞன் விபத்தில் பலி!

அதிர்ஷ்டமாக கிடைத்த பெருந்தொகை பணத்துடன் சென்ற தமிழ் இளைஞன் விபத்தில் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு