மட்டக்களப்பு – கல்லடி பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வின் போது, பாதுகாப்பற்ற விளையாட்டு உபகரணம் விழுந்து பெண்ணொருவர் காயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விபத்து நடந்த பகுதியை பார்வையிட்ட மட்டு மாநக முதல்வர் சிவம் பாக்கியநாதன், புத்தாண்டு என்பது மகிழ்ச்சியான தருணம் ஆகவே, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“விளையாட்டு உபகரணங்களில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. குறிப்பாக இவ்வாறான புகையிரத வண்டிகளில் இருக்கைப்பட்டிகள் (Seat Belts) கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள சில விளையாட்டு நிகழ்வுகளில் அத்தகைய பாதுகாப்பு கவசங்கள் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகின்றது.”
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாத மற்றும் பாதுகாப்பு கவசங்கள் இல்லாத விளையாட்டு நிகழ்வுகளில் பொதுமக்கள் கலந்துகொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தேவையற்ற விபத்துகளைத் தவிர்க்க மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
பாதுகாப்பற்ற முறையில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்துவோர் குறித்தும், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.








