Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

தையிட்டி விகாரை காணி விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகிறாரா அமைச்சர் சந்திரசேகர்?

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்வதனை தடுத்து நிறுத்த கோரி விகாராதிபதி பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும் , அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரி இருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் , விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை , நேற்றைய தினம் இரவு மூன்று பேருந்துக்களில் தென்னிலங்கையில் இருந்து , விகாரை வழிபாட்டிற்கு என பலர் வருகை தந்து விகாரையில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்றைய தினம் காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு வந்துள்ளனர்.

இருந்த போதிலும் , காலை 09.30 மணி வரையில் , காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர் , மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் , காணி உரிமையாளர்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகியுள்ளது.

அதேவேளை, காணி அளவீட்டு பணிகள் தொடர்பில் புத்த சாசன அமைச்சோ , மாவட்ட செயலரோ தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தல் எதனையும் வழங்கவில்லை. உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இல்லாமல் , விகாரை காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாது என விகாராதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!
செய்திகள்

மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்- விசாரணையில் முன்னேற்றமில்லை!

September 28, 2026
காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை
செய்திகள்

காட்டு யானைகளுக்கு உணவு வழங்கினால் சட்ட நடவடிக்கை

September 28, 2026
டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!
செய்திகள்

டுபாயில் போதைப்பொருள் வலையமைப்பு; இலங்கையில் இருந்து இயக்கியதாகக் கூறப்படும் இளைஞர் கைது!

September 28, 2026
புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!
செய்திகள்

புதிய ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தெரிவு நிறைவு; விரைவில் பெயர்ப்பட்டியல் வெளியீடு!

September 28, 2026
Next Post
மூன்று மாதங்களில் போதைப்பொருளுடன் 10 நெடுநாள் மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!

மூன்று மாதங்களில் போதைப்பொருளுடன் 10 நெடுநாள் மீன்பிடி படகுகள் சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு