Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

கரன்தெனிய ராஜுவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸார் தீர்மானம்!

4 months ago
in செய்திகள்

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், குறித்த சந்தேகநபருக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றங்களால் 15 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 26 வெளிநாட்டுப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்றார். மீட்டியாகொட, கரன்தெனிய, பலப்பிட்டிய மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தவராவார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 81 டி-56 ரக துப்பாக்கிகள், 107 கைத்துப்பாக்கிகள் மற்றும் 76 ரிவோல்வர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

2024 முதல் 2026 வரை சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சர்வதேச ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படவுள்ளதுடன், சர்வதேசக் காவலில் உள்ள 8 பேரை விரைவில் நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 94 சிவப்பு அறிவித்தல்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இதுவரை 30 இலட்சத்து 11,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,873 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2026 ஆம் ஆண்டில் மாத்திரம் 44,587 பிடியாணையாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,796 சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 30 முதல் இன்றுவரை 1,579 கிலோ 616 கிராம் ஹெரோயின், 1,975 கிலோ 970 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 5,115 கிலோ 716 கிராம் கஞ்சா ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!
செய்திகள்

இரத்மலானையில் வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்!

August 5, 2026
கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை
செய்திகள்

கடுவலையில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்துக்கு தீ வைப்பு; பொலிஸார் விசாரணை

August 5, 2026
Next Post
பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

பெண் ஒருவரின் தலைமுடியை வெட்டி சித்திரவதை செய்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு