Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது.

நியூ ஆர்லியன்ஸில் உள்ள 5வது அமெரிக்க சுற்றுவட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

வரி வசூலிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு இது போன்ற தடை அவசியமற்றது என்றும், இது அரசாங்கத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் நீதிபதிகள், தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடுகளில் மது காய்ச்சுவதைத் தடுப்பது வரி வருவாயை அதிகரிக்காது, மாறாகக் குறைக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தர்க்கத்தைப் பின்பற்றினால் எதிர்காலத்தில் வீடுகளில் இருந்து செய்யப்படும் அனைத்து வேலைகளையும் வரி ஏய்ப்பு எனக் கூறி அரசாங்கம் தடுக்கக்கூடும் என நீதிபதி எடித் ஹோலன் ஜோன்ஸ் தனது தீர்ப்பில் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டுப் போருக்குப் பிந்திய மறுசீரமைப்பு காலமான 1868 ஆம் ஆண்டு மதுபான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டது.

இதுவரை இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது
இந்தநிலையில், ‘uobby Distillers Association’ என்ற தன்னார்வ அமைப்பு மற்றும் அதன் நான்கு உறுப்பினர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், பொழுதுபோக்காகவும் வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என அவர்கள் வாதிட்டனர்.

இந்தத் தீர்ப்பு அமெரிக்காவில் “தனிமனித சுதந்திரம்” மற்றும் “மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பு” தொடர்பான ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகின்றது.

எனினும், அரசாங்கம் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் தீர்ப்பின் மூலம், தங்களது விருப்பமான பானங்களை வீடுகளிலேயே தயாரித்துக்கொள்ள விரும்பும் பல அமெரிக்கர்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு