உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் ஒரு
நிறுவனத்தின் முகாமையாளர் அநுராதபுரம் பொலிஸுக்கு எதிராக முறைப்பாடு அளித்து, மூன்று
ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட முகாமையாளருக்குப் பதில்
கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, தனது வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை, ‘சீசர்ஸ்’ என்று
கூறிக்கொண்ட ஒரு குழுவினர் எடுத்துச் சென்றமை தொடர்பாகத் தான் அளித்த முறைப்பாட்டை
அநுராதபுரம் மொலிஸ் முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, தேசிய பொலிஸ்
ஆணைக்குழுவுக்கு குறித்த நபர் முறைப்பாடு அளித்திருந்தார்.
மேலும், இவ்விடயத்தில் விசேட விசாரணை நடத்தப்பட்டு, தனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும்
அவர் கோரியிருந்தார்.
மேலும், முகாமையாளர் தனது முறைப்பாட்டில் கார் திருடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம்
தொடர்பாக அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு எண் 28398-ல்,
கேள்விக்குரிய திருடப்பட்ட வாகனத்தை அநுராதபுரம் பொலிஸ் ஒரு வழக்குப் பொருளாகச்
சேர்க்கவில்லை என்றும், இது சட்டததுக்குப் புறம்பானது என்றும் முறைப்பாடு அளித்திருந்தார்
மூன்று வருடத்தின் பின் வழங்கப்பட இந்தப் முறைப்பாட்டுக்கே தேசிய பொலிஸ் ஆணைக்குழு 2026 ஏப்ரல் 8 ஆம் திகதி பதில் கடிதம் அனுப்பியுள்ளது.








