Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!

தெற்கு லெபனானில் சிலுவை சேதம் – இராணுவ வீரரின் செயலுக்கு உலகளாவிய கண்டனம்!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தெற்கு லெபனானில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ கிராமமான டெபெலில் இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் இயேசுவின் சிலுவையைச் சேதப்படுத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வரும் சூழலில், டெபெல் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர் ஒருவர், அங்கிருந்த சிலுவையைச் சேதப்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தப் புகைப்படம் வைரலானதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

இந்தச் செயலுக்கு அமெரிக்கா மற்றும் சர்வதேச கிறிஸ்தவ மத அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதுகுறித்து கத்தோலிக்க திருச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“இந்தச் செயல் கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரான அவமதிப்பு மட்டுமல்ல; அடிப்படை மனித விழுமியங்கள் மற்றும் மத நல்லிணக்கத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.” எனச் சாடியுள்ளது.

சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இச்சம்பவத்திற்கு அதிகாரப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

“இத்தகைய செயல்கள் யூதப் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரானது.”

“தொடர்புடைய ராணுவ வீரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்.” என அவர் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. மேலும், சேதப்படுத்தப்பட்ட சிலுவையை மீண்டும் சீரமைக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், மத அடையாளங்களுக்கு மதிப்பளிக்க வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
Next Post
பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு; பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

பல மாகாணங்களில் இன்று வெப்பமான வானிலை அதிகரிப்பு; பிற்பகலில் இடியுடன் கூடிய மழை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு