Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

நிதி அமைச்சின் பணம் போலி கணக்கிற்கு மாற்றப்பட்டதா?; அரசாங்கம் மீது நாமல் கடும் குற்றச்சாட்டு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரச பணம் 2.5 மில்லியன் டொலர் யாருடைய கணக்கிற்குச் சென்றது? அல்லது அதைவிட அதிக பணம் சென்றதா? என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,323 கொள்கலன்கள் விவகாரம் மற்றும் நிலக்கரி மோசடியைப் போலவே நிதி அமைச்சின் பணம் போலி வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட மோசடியையும் மூடிமறைக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முயற்சிக்கின்றனர்.

ஒருபுறம் அரசாங்கம் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. அந்த நஷ்டத்தை மக்கள் மீது சுமத்துகிறது. மறுபுறம் அரசாங்கத்திற்குத் தெரியாமலேயே அதன் அதிகாரிகள் அரசாங்கப் பணத்தை போலி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

போலி மின்னஞ்சல் செய்தி ஒன்றின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் 2.5 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்துள்ளது. ஆனால் அரசாங்கம் இன்றுவரை எடுத்துள்ள சட்ட நடவடிக்கை என்ன?.

முன்னொரு காலத்தில் நல்லாட்சி அரசாங்கம் ஜே.வி.பி-யுடன் இணைந்து ஊழல் ஒழிப்புக் குழுவை அமைத்து ‘திருடர்களைப் பிடிப்போம்’ எனக் கூறிக்கொண்டு மத்திய வங்கியை கொள்ளையடித்தது.

இப்போது அவர்களே மீண்டும் அரசாங்கத்திற்கு வந்து தாங்கள் திருடர்களைப் பிடிப்பதாகக் கூறிக்கொண்டு நிதி அமைச்சின் பணத்தையும் தமது கணக்குகளுக்கு மாற்றும் நிலைக்கு வந்துள்ளனர்.

நிதி அமைச்சிற்கு ஏதேனும் கொடுப்பனவு செய்யவோ கடன் அல்லது வட்டி செலுத்தவோ மின்னஞ்சல் ஒன்று வருகிறது என்றால் அதற்கு நிதிச் செயலாளர் மற்றும் நிதி அமைச்சர் என்ற ரீதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்புக்கூற வேண்டும்.

தனது கீழுள்ள நான்கு புதிய அதிகாரிகள் செய்த தவறு அதனால் அவர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டேன் எனக் கூறி ஜனாதிபதி எப்படி கூற முடியும்.

ஜனாதிபதியே விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர். இந்த நாட்டின் நிதி அமைச்சின் கணக்கிலிருந்தே பணம் வெளியேறியுள்ளது வேறு எங்கிருந்தும் அல்ல. இதற்கு முன்னர் கடன்கள் மத்திய வங்கியூடாகவே செலுத்தப்பட்டன.

தற்போது புதிய சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் நிதி அமைப்பிற்கு கிடைத்துள்ளது. எனவே நிதி அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
Next Post
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் நிதி மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.