உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (06) தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஈரானுடனான போர்நிலையை முடிவுக்குக் கொண்டுவர அமைதி உடன்படிக்கை எட்டப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தொடர்ந்து இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்திலிருந்து தடையின்றி எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் விலை குறைவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதன்படி, பிரெண்ட் வகை கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 1.52 அமெரிக்க டொலர் (1.38%) குறைந்து, 108.35 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) வகை கச்சா எண்ணெயின் விலை 1.50 அமெரிக்க டொலர் (1.47%) குறைந்து, 100.77 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது.
இதனுடன், மர்பன் வகை கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 105.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.








