Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் DIG-யின் காணியில் சிறுத்தை தோல், துப்பாக்கி ரவைகள் மீட்பு; புத்தளத்தில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

முன்னாள் DIG-யின் காணியில் சிறுத்தை தோல், துப்பாக்கி ரவைகள் மீட்பு; புத்தளத்தில் அதிரடிச் சுற்றிவளைப்பு!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் அட்டவில்லுவ பகுதியில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமானதாக கூறப்படும் காணியில், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் துப்பாக்கி ரவைகள் மற்றும் சிறுத்தை தோல் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், குருநாகல் ரிதிகல கருவலகஸ்வெவ பகுதி வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும், புத்தளம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, பதப்படுத்தப்பட்ட ஒரு பெரிய சிறுத்தை தோல், புள்ளிமான் தோல் ஒன்று மற்றும் 9 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவ இடத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், அந்த காணியை முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு பெற்று விவசாயம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வனவிலங்கு அதிகாரிகளின் தகவலின்படி, கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோல் சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய சிறுத்தையுடையது எனவும், இவ்வகை விலங்குகள் பொதுவாக வில்பத்து தேசிய பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணியின் உரிமையாளரான முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரை விசாரணைக்காக அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிதிகல வனவிலங்கு பிரிவு முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை, பிராந்திய உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
Next Post
நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

நாடெங்கிலும் 4,000 அதிபர் பதவிகள் வெற்றிடம்; நிரப்பத் துரித நடவடிக்கை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு