பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தபோது, இலஞ்சம் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் பிணையை இரத்து செய்யுமாறு இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திடம் விடுத்திருந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.








