Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கைக்கடிகார பற்றரியை விழுங்கிய சிறுவன் பலி; தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

கைக்கடிகார பற்றரியை விழுங்கிய சிறுவன் பலி; தந்தை வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

4 months ago
in செய்திகள்

கைக்கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் சிறிய பட்டன் மின்கலத்தை தவறுதலாக விழுங்கிய ஏழு வயது சிறுவன், காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

காலி – வெலிகம, படவல பகுதியைச் சேர்ந்ததும், தலாரம்ப இந்தசார வித்தியாலயத்தில் தரம் 3-இல் கல்வி கற்று வந்த 7 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மரண விசாரணையை வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சந்திரசேன லொகுகே மேற்கொண்டார்.

விசாரணையின் போது சாட்சியமளித்த சிறுவனின் தந்தை, பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டிருந்த கைக்கடிகார மின்கலத்தை தனது மகன் தவறுதலாக விழுங்கியதாக தெரிவித்தார்.

இதையடுத்து, வைத்தியரின் ஆலோசனைப்படி எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பின்னர் மாத்தறை பொது வைத்தியசாலையிலும் அதன் பின் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய தேசிய வைத்தியசாலையிலும் சிறுவன் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

அங்கு அறுவை சிகிச்சை மூலம் மின்கலம் அகற்றப்பட்டதுடன், சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் அவனுக்கு முதுகுவலி, வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் இருந்தபோது சிறுவன் இரத்த வாந்தி எடுத்ததால் மீண்டும் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

கராபிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யு.டி.ஏ. திஸாநாயக்க மேற்கொண்ட பிரேதப் பரிசோதனையில், குடலின் கீழ்ப்பகுதியில் உள்ள பிரதான இரத்த நாளம் சேதமடைந்ததால் ஏற்பட்ட உட்புற இரத்தப்போக்கே மரணத்திற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள்; பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தரவுகள்!

கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 12,000 சைபர் குற்றங்கள்; பாராளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தரவுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு