Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

மன்னாரில் அனைத்து மணல் அகழ்வு உரிமங்களும் தற்காலிக இரத்து

4 weeks ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு உரிமங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலையைத் தொடர்ந்து, அனைத்து மணல் அகழ்வு உரிமங்களையும் தற்காலிகமாக ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்குதல், மணல் அகழ்வு உரிமங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மணல் விலையை கட்டுப்படுத்துதல் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மணல் வர்த்தகர்கள் இடையே நேற்று (10) மன்னார் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, இனி மணல் அகழ்வு உரிமங்கள் புதிய விதிமுறைகளின் கீழ் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், மணல் வர்த்தகர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைத்ததாக கூறினார்.

மணல் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், வறிய குடும்பங்கள் வீடுகள் அமைப்பதற்காக 3 கியூப் மணலை 50 ஆயிரம் ரூபாவிற்கும், அரசாங்க கட்டுமானப் பணிகளுக்காக 3 கியூப் மணலை 65 ஆயிரம் ரூபாவிற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மணல் கொண்டு செல்லும் போது ஒரு கிலோமீட்டருக்கு 350 ரூபாய் வரை கட்டண உயர்வு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், மணல் அகழ்வு உரிமங்களை வழங்கும் நடைமுறையில் புதிய சட்ட விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுவருவதாகவும், மாவட்ட செயலாளரின் இறுதி தீர்மானம் மற்றும் மேற்பார்வையின் கீழ் உரிமங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மற்றும் புவியியல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் மணல் அகழ்வு உரிமங்களை வழங்கும் நடைமுறையில் ஒழுங்குமுறை ஏற்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை
செய்திகள்

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த பிக்குவுக்கு 24 ஆண்டுகள் கடுழியச் சிறைத்தண்டனை

June 7, 2026
தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 5 உறுப்பினர்களை பதவி நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

June 7, 2026
சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்
செய்திகள்

சில கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை; மறு அறிவித்தல் வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம்

June 7, 2026
சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்
செய்திகள்

சஹாரா பாலைவனத்தில் துயரம்: ஹஜ் பெருநாளை முடித்து கொண்டு திரும்பிய 49 பேர் குடிநீர் இல்லாததால் மரணம்

June 7, 2026
ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்
செய்திகள்

ஒரு பாடலுக்கு பயப்படுவது வேடிக்கையான விடயம்; சாணக்கியன்

June 7, 2026
பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்
செய்திகள்

பெற்றோரின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கும் சட்டம்

June 7, 2026
Next Post
எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

எரிபொருள் மற்றும் தங்கப் பயன்பாட்டில் கட்டுப்பாடு அவசியம்; இந்தியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு