Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

4 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் எல்லை கிராமங்கள் சிங்கள மயப்படுத்துகின்ற வேலை திட்டத்துக்கு இங்கு இருக்கும் தமிழ் தேசியம் பேசி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அநியாயத்தை ஏன் முன்கொண்டு வரவில்லை? வடகில் எம்.சுமந்திரன் போல கிழக்கில்; இரா.சாணக்கியன் இங்கு உள்ள ஏனைய நா.உறுப்பினர்களை வெருட்டி அடக்கி இந்த சிங்களமயமாக்கலுக்கு துணை போவதற்கு ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் நாடாளுமக்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு எல்லை கிராமான வடமுனை ஊத்துச்சேனை கிராம மக்களை சந்திக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுகிழமை (10) கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஊத்துச்சேனையில் இடம்பெற்றது. இதில் கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மு.நா.உறுப்பினர் செ.கஜேந்திரன், கலந்துகொண்டு மக்களின் பிரச்சனை களை கேட்டறிந்து கொண்ட பின்னர் உiராற்றுகையில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் வடகிழக்கில் பெரும்பான்மையாக இருக்க கூடாது என்பதனால் பிரித்தானியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிய நாளில் இருந்து குடியேற்றங்களை செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த குடியேற்றங்கள் தென் தமிழ் தேசத்தில் கிழக்கு மாகாணத்தில் பிரதானமாக முன் எடுக்கப்படுகின்றது கூடுதலாக அம்பாறை திருகோணமலை பிரதேசத்திலும் இந்த திட்டங்கள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது. மகாவலி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் குடியேற்ற வேலைத்திட்டம் மிக மோசமாக இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தை முற்று முழுதாக சிங்கள மயப்படுத்துவதற்கு கிழக்கு மாகணத்தின் இதயமாக இருப்பது மட்டக்களப்பு. இதனை நேரடியாக மாற்றுவது மிகவும் கஷ்டம் எனவே கிழக்கு மாகாணத்தின் இரண்டு எல்லைகளை முற்று முழுதாக சிங்கள மயமாக்குதல்.

அம்பாறையையும் திருகோணமலையையும் அதில் இருந்து படிப்படியாக முன்னேறி மட்டக்களப்பை தனிமைபடுத்திய பின்னர் மட்டக்களப்பில் கைவைக்கலாம் என்ற ஒரு திட்டம்.

அதற்கு அமைய கிழக்கின் இரண்டு எல்லைகள் சிங்கள மயமாக்குதல் போர் காலத்துக்கு முதல் இந்த வேலைத்திட்டம் முடிந்தது. எனவே தமிழ் மக்களின் தேச அந்தஸ்தை அங்கீகரித்து எங்களை நாங்களே ஆளக்கூடிய சமஸ்டி தீர்வை வழங்க வேண்டும். அல்லது பிரிந்தாவது போகவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ் அரசியலில் 1977 ம் ஆண்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தை எடுத்தனர்.

அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெரியளவில் குடியேற்றம் செய்ய முடியவில்லை. ஆனால் 2009 க்கு பின்னர் போராட்டத்துக்கு பங்காக இருந்த மக்களை அழித்து இனழிப்பை செய்த பின்னர் இன்று மட்டக்களப்பில் கையைவைக்க ஆரம்பித்துள்ளனர் இது தான் உண்மை.

கிழக்கில் விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கட்டதையடுத்து மாவட்டத்தை சிங்கள மயப்படுத்த இந்த மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையை கைப்பற்றுவதற்காக கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் ராஜபக்ஷ தரப்பு மாதுறு ஓயா வலதுகரை அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்தனர். இதன்போது சோளம் செய்கை என்ற பெயரில் கள்ள உறுதிகளை வழங்கி சட்ட விரோதமாக சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தினர்.

இதன்போது தான் பண்ணையாளர்கள் கால்நடைகளை கொண்டு செல்லும் போது குடியேறிய சிங்களர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வாறு தான் மட்டக்களப்பு எல்லைக் கிராமமான ஊத்துச்சேனை கிராமத்தையும் அதே வேலைத்திட்டத்துக்குள் கொண்டுவரப்படுகின்றது.

மயிலத்தனை மாதவனை பிரச்சனையை கூட ஏன் மட்டக்களப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் தடவையாக வெளிக் கொண்டு வரவில்லை? தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மட்டக்களப்புக்கு வந்து இந்த பிரச்சனை தொடர்பில் முதல் தடவை கேட்டபோது அவர் அந்த இடத்துக்கு சென்று முதல் தடவையாக ஊடகத்துக்கு வெளிக் கொண்டு வந்தார்.

ஏன் இங்கு இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த அநியயாயத்தை ஏன் முன்கொண்டு வரவில்லை? சிங்கள மயப்படுத்துகின்ற வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் ஒரு எல்லை வரைக்கும் கொண்டு போவதற்கு இந்த மண்ணை பிரதிநிதிப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன்? அமைதியாக இருந்தனர்.

அமைதியாக இருந்தால் மட்டும் தான் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்ற செ.கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வந்து கதைத்தால் தேவை இல்லாத பிரச்சனை வெளிவருவதற்கு பொய்யை சொல்லி கொச்சைப்படுத்தி இன்னும் கொஞ்சகாலம் மூடி மறைக்கலாம் அது தான் நோக்கமாக இருக்கலாம்?

எனவே அவர்கள்தான் வாக்கு கேட்கப் போகின்றனர் உங்கள் பிரச்சனையை முன் நின்று வெளிக் கொண்டு வரவேண்டியது அவர்கள் பொறுப்பு ஏன் நடக்கவில்லை? ஏன் என்றால் அவர்களும் இதற்கு முழுமையாக துனைபோகின்றனரா?

வடகில் இருக்கும் எம்.சுமந்திரன் போல கிழக்கில் இருக்கும் இரா.சாணக்கியன் வந்து இங்கு உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களை வெருட்டி அவர்களை அடக்கி இந்த சிங்களமயத்திற்கு துணை போவதற்கு வந்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளாரா?

நான் கேட்பது தமிழ் தேசியம் பேசி நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற தமிழரசு கட்சி உறுப்பினர்களைபற்றிதான் நான் கேட்கின்றேன்?

உண்மையில் எல்லை பகுதியில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்களை தக்கவைத்தால் மட்டும் தான் இந்த இடங்களில் இந்த மண்ணில் வாழமுடியும். இந்த மண்ணை விட்டுவிட்டு போவீர்கள் ஆனால் இந்த காணி சுருங்கும்.

எல்லையை பாதுகாப்பது என்றால் அந்த எல்லையில் இருக்க கூடியவர்களுக்கு வசதிகளையும் அவர்களது பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தால் மட்டும்தான் அவர்கள் நின்று பிடிப்பார்கள் எங்களது நோக்கம் அதுதான்.

நாங்கள் உங்களை தேடிவருவதற்கான காரணம் எங்களுடைய அரசியல் தமிழ் தேசத்தை பாதுகாப்பதாக இருந்தால் எங்கள் எல்லைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லைகள் பாதுகாக்கபடாது இருந்தால் எங்கள் தேசத்தின் நிலப்பரப்பு சுருங்கும் அது தான் எதிரியின் விருப்பம் ஆகவே தான் நாங்கள் எங்கு மக்கள் பிரச்சனையாக இருக்கின்றனரே அங்கு தேடிச் சென்று அந்த பிரச்சனைகளை ஆக குறைந்தது வெளிக் கொண்டு வருவோம் என நாங்கள் உங்களுக்கு கொடுக்க கூடிய உத்தரவாதம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.