Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்பாடு!

3 months ago
in செய்திகள்

மோசமான வானிலை காரணமாக ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியின் தியகலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டிட்வா புயலின்போது வட்டவளை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் குவிந்திருந்த மண் அகற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று (10) மாலை பெய்த கடுமையான மழையால் அதே இடத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தற்போதைய நிலையில் குறித்த பகுதியில் வாகனப் போக்குவரத்து ஒருவழிப்பாதையாக மட்டுமே இடம்பெறுகிறது.

மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தேங்கியுள்ள இடிபாடுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் பல பகுதிகளில் நிலம் வெடித்து அபாய அறிகுறிகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல், குறித்த பாதையில் பயணிக்கும் சாரதிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் பயணிக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
Next Post
ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு