Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

காரைதீவில் ஐஸ்–ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல்; இருவருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கை கடந்த சனிக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக கடல் மற்றும் தரை வழியாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த குழுவுடன் தொடர்புடையவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் “கடற்குதிரை” எனப்படும் நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும், மற்றொருவரிடமிருந்து 20 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 5 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80,000 ரூபாய் பணம், மின்னணு தராசு மற்றும் நவீன கைப்பேசிகள் உள்ளிட்ட பொருட்களும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் சான்றுப்பொருட்களும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடகிழக்கு சிங்கள மயப்படுத்தலுக்கு சுமந்திரனும் சாணக்கியனும் துணை போகின்றனரா?;கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு