Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

ஆலையடிவேம்பில் அதிரடி சோதனை; தரமற்ற உணவுகள் அழிப்பு, 2 உணவகங்களுக்கு சட்ட நடவடிக்கை!

4 months ago
in செய்திகள்

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் பெருமளவிலான தரமற்ற உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், விதிமுறைகளை மீறிய இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனையின் பேரில், ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடி வழிகாட்டுதலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் தலைமையிலான குழுவினர் பிரதேசத்தில் உள்ள 14 இரவு நேர உணவகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உணவு தயாரிப்பு முறை, சமையலறை சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்கள் சேமிப்பு நிலை ஆகியவை தீவிரமாக பரிசோதிக்கப்பட்டன.

சுகாதார விதிமுறைகளை மிக மோசமாக மீறி செயல்பட்ட இரண்டு உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் இருந்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த சோதனை நடவடிக்கையில் உணவு மற்றும் மருந்து பரிசோதகர் எஸ். ஜீவராஜா உள்ளிட்ட ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பலரும் பங்கேற்றனர்.

அதேவேளை, உணவக உரிமையாளர்களுக்கு தரமான உணவு வழங்குதல் மற்றும் சமையலறை சுகாதாரத்தை பேணுதல் தொடர்பாகவும் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் “படுவத்தே சாமர” அசர்பைஜானில் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுத் தலைவர் "படுவத்தே சாமர" அசர்பைஜானில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு