Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் மீது கடுமையாகும் சட்டம்

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோதமான முறையில் மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் உயிர்பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில், வாகனங்களுக்கான உரிய தகுதிச் சான்றிதழ்கள் இன்றி ஆபத்தான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்கள் இயக்கப்படுவதாக காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், பல பேருந்துகள் அனுமதியின்றி மாற்றியமைக்கப்பட்டிருந்தமையும், அவற்றுக்கு செல்லுபடியாகும் வீதி தகுதிச் சான்றிதழ்கள் இல்லாததும் தெரியவந்துள்ளது.

மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளின் படி, அனுமதி பெறாத ஆபத்தான உதிரிப்பாகங்களை பொருத்துதல், அனுமதியின்றி நிறமிளக்கும் மின்னும் விளக்குகள் பொருத்துதல், அதிக சத்தமிடும் தரமற்ற ஒலிப்பான்கள் பயன்படுத்துதல், வாகனத்தின் அசல் நிறம், வடிவம், கட்டமைப்பை அனுமதியின்றி மாற்றுதல், அனுமதியின்றி விளம்பரங்கள், சித்திரங்கள் அல்லது உருவங்கள் ஒட்டுதல், அதிக சத்தம் எழும் வகையில் ஒலி ஒடுக்கிகளை மாற்றுதல், கூடுதல் பாகங்கள் பொருத்துதல் போன்றவை குற்றமாகும்.

மேலும், அதிக கரும்புகை வெளியிடும் அல்லது சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும்.

அதன்படி, சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தின் இலக்கம், திகதி, நேரம் மற்றும் இடம் ஆகிய விபரங்களை 070 3500525 என்ற வாட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கமாறு காவல்துறை பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை குறைத்து, உயிர்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுவதும் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

பசறை பிரதேச செயலகப் பிரிவிற்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு