Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளேன்; உதய கம்மன்பில குற்றச்சாட்டு

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசாங்கத்தின் ஊழல் மற்றும் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், திட்டமிட்ட வகையில் தன்னை நெருக்கடிக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று விசாரணைகளுக்காக முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த மூன்று நாட்களிலேயே அதன் பலவீனங்களை சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் தாம் மட்டும் அரசாங்கத்தின் குறைகளை வெளிப்படுத்தியதாகவும், தற்போது முழு நாட்டும் அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து வெளிப்படையாக பேசுவதன் காரணமாக, பல்வேறு பொலிஸ் நிலையங்களுக்கு வாக்குமூலம் வழங்குமாறு தொடர்ந்து அழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் அனுசரணையுடன் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்புகள் ஊடாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்றும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
Next Post
வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

வாகரை அபிவிருத்தி மற்றும் மக்கள் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு