Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

அம்பலாந்தோட்டையில் தலை துண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை; பொலிஸார் விசாரணை!

4 months ago
in செய்திகள்

அம்பலாந்தோட்டை, மாமடல தெற்கு, போகுடுயாய பகுதியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொருவர் பாரிய காயங்களுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், காயமடைந்தவர் அவரின் மனைவியின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணைகளின்படி, குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகவும், பின்னர் அவரை கொலை செய்துவிட்டு உடலை துண்டித்து மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலையின் அருகே விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கொல்லப்பட்டவர் கடந்த ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அம்பலாந்தோட்டை அலேகொட மேற்கு பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவத்தின் சந்தேகநபராக இருந்ததாகவும், அந்த வழக்கில் விளக்கமறியலில் இருந்த பின்னர் கடந்த மார்ச் 30ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த முந்தைய சம்பவத்திற்கான பழிவாங்கும் நோக்கில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் கொலையாளிகள் கொண்டு வந்ததாக கருதப்படும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அம்பலாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
Next Post
எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

எரிபொருள் கியூ.ஆர் முறைமை நீக்கப்படமாட்டாது; அமைச்சர் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு