Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த பொலிஸ் உத்தியோகத்தர் காத்தான்குடியில் கைது

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

போக்குவரத்து பொலிசாரினால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை போலியாக தயாரித்த குற்றச்சாட்டில் யாழ் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை இன்று செவ்வாய்கிழமை (12) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 4ம் திகதி மட்டக்களப்பு தாழங்குடா பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த ஒருவரை நிறுத்தி வேணங்களை சோதனையிட்டனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட வரை நிறுத்தி சோதனை செய்தனர். இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் பொலிசாரால் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதி பத்திரத்தை காட்டியுள்ளார்

குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் கடந்த 2024 ம் ஆண்டு யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சாரதி அனுமதி பத்திரம் பொலிசாரால் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த காத்தான்குடியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி 01.08.2024 தற்காலிகமாக சாரதி அனுமதி பத்திரம் ஒன்றை வழங்கியதுடன் அதனை தொடர்ந்து போலியான கோப்பாய் பொலிஸ் நிலைய இறப்பர் முத்திரையை பயன்படுத்தி தற்காலிக போலியான சாரதி அனுமதி பத்திரத்தை 8 முறை நீடித்து கொடுத்துள்ளார். என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன் வீட்டை முற்றுகையிட்ட பொலிசார் இறப்பர் முத்திரை ஒன்றை மீட்டதுடன், போலி தற்காலிகமான சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த சம்மாந்துறையைச் சேர்ந்த குறித்த நபரை கைது செய்து மட்டு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை நாளை 12ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் போலியான ஆவணங்களை தயாரித்து வழங்கி வந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று செவ்வாய்க்கிழமை பொலிஸ்நிலையத்துக்கு வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்ய அழைப்பு விடுத்த நிலையில் அங்கு சென்ற அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நாளை 13 ம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
Next Post
தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

தமிழினப்படுகொலை நினைவு வாரம் ஆரம்பம்; வடக்கு-கிழக்கில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு