“ஊட்டச்சத்து மற்றும் உள்ளுர் விலங்கு உணவுகளை உட்கொள்ளுதல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு” இன்று (14) கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபையில் நடைபெற்றது.
நஞ்சற்ற உணவை தவீர்த்து பூரண நிறை உணவாக தூய பசும்பால் நுகர்வை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டமாக இது அமைந்தது.
குறித்த திட்டமானது கிழக்கு மாகாண கால் நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் நிதி அனுசரணையில் வாகரை அரச கால் நடை வைத்திய அதிகாரி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை தவிசாளர் கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் வாகரை பிரதேச அரச கால் நடை வைத்தியர் எம்.எம்.உறுஜ்.சபை செயலாளர் ரி.எஸ்.பி.குயின்ரஸ்.கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக போதனாசிரியர் எம்.எஸ்.எ.ஹாரிஸ்.மற்றும் பொது சுகாதார பரிசோதகர் யூ.எம்.றிபான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



















