Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

குருமன்வெளியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழின படுகொலை நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் குருமன்வெளி வட்டாரக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (18.05.2026) குருமன்வெளி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

குருமன்வெளி வட்டார உறுப்பினர் அ.பத்மதேவு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நாளில், இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில் “முள்ளிவாய்க்கால் நினைவு நாள் – மே 18”, “தமிழின அழிப்பு நாள்” ஆகிய வாசகங்கள் தாங்கிய பிரதான பதாகை அமைக்கப்பட்டிருந்தது.

ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி இந்நிகழ்வின் பிரதான அங்கமாக, ஈழப்போராட்டத்தில் தனது காலினை இழந்த மாற்றுத்திறனாளி போராளியான கோபாலசிங்கம் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக அங்கு கூடியிருந்தவர்களால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.அரசியல்
பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், உபதவிசாளர் அ.விசிகரன், போரதீவுப்பற்று பிரதேச சபை உபதவிசாளர் த.கயசீலன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,கட்சியின் முக்கியஸ்தர்கள், முன்னாள் போராளிகள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு தங்களது அஞ்சலிகளைத் செலுத்தினர்.

இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றி, மரணத்தின் விளிம்பில் உப்புக் கஞ்சியை மட்டும் அருந்தி உயிர் தப்பிய அவல நிலையை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் நிகழ்வும் இங்கு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

“உயிரிழந்த உறவுகளின் தியாகங்களை நெஞ்சில் ஏந்தி, தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்ற உறுதியுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

தனியார் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் முயற்சி? – ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

July 26, 2026
அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்
செய்திகள்

அரிசியை அதிகவிலைக்கு விற்று 5 இலட்சத்தை இழந்த கடைக்காரர்

July 26, 2026
பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக சுரேஸ்குமார் ஜெய்ஸ்மன் நியமனம்

July 26, 2026
ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
Next Post
விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு