யாப்பஹுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (18) இரவு மஹவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மகுல்பொத்த, மஹவ, ரிதீபெந்திஎல்ல மற்றும் பலல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் 17 முதல் 51 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








