நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்தப் படுகொலைக்கு காரணமானவர்கள் மீது சர்வதேச நீதி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரித்தானிய அரசையும் சர்வதேச சமூகத்தையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.



தமிழீழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு குற்றச்சாட்டுகளை நினைவுகூரும் வகையில் “தமிழ் இனப் படுகொலை நினைவு நாள்” என்ற தலைப்பில் இந்த நிகழ்வு அமைந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்ற வளாகம் மற்றும் டௌனிங் ஸ்ட்ரீட் பகுதிகளுக்கு அருகில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


















