Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

பாடசாலை அதிபரின் இடமாற்றத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இருவேறு தரப்பினர் போராட்டம்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ.மி.த.க. பாடசாலையின் அதிபர் இடமாற்ற விவகாரம் தொடர்பாக, கிராம மக்களுக்கிடையில் இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இன்று (19) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராகப் பணியாற்றி வந்தவரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வலயக் கல்வித் திணைக்களம் தற்காலிக இடமாற்றம் செய்திருந்தது. இந்நிலையில், தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்ட அதிபரை மீண்டும் அதே பாடசாலைக்கு நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளில் ஒரு தரப்பினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, “மாற்றாதே மாற்றாதே அதிபரை மாற்றாதே!”, “அதிபரின் தற்காலிக இடமாற்றத்திற்கு காரணம் என்ன? அதிகாரிகளே பதில் சொல்!” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் நிறைவில், வலயக் கல்விப் பணிப்பாளருக்கு வழங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட மனு ஒன்று, பாடசாலையின் தற்போதைய பதில் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் 75க்கும் மேற்பட்ட பெற்றோர்களும் கிராம மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மறுபுறம் நிலவும் முரண்பட்ட பின்னணி:

இதேவேளை, குறித்த அதிபரின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து அதிருப்தியுற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அடங்கிய மற்றொரு தரப்பினர், இந்த அதிபரை உடனடியாகப் பாடசாலையிலிருந்து இடமாற்ற வேண்டும் எனப் பல வருடங்களாக உரிய கல்வி அதிகாரிகளிடம் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை முன்வைத்து வந்துள்ளனர். இவர்களின் புகார்களின் அடிப்படையிலேயே, கல்வித் திணைக்களத்தினால் குறித்த கடமை நிறைவேற்று அதிபருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பிராந்திய ஊடகவியலாளர் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது; “இன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபருக்கு ஆதரவான தரப்பினர் மட்டுமே. ஆனால், கிராமத்தில் உள்ள மற்றொரு தரப்பினர் இந்த அதிபருக்கு எதிராகப் பல கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அவர் மீண்டும் பாடசாலைக்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
“பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்”; சஜித் பிரேமதாச!

"பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு ஜெனீவாவில் அல்ல, நாட்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும்"; சஜித் பிரேமதாச!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.